Wednesday, April 25, 2012

சத்தம் இல்லாத சாலை கேட்போம்

பீஈப்ப்ப்ப்...பீஈஎப்ப்ப்பி”… “பூஊம்ம்ம் பூஊம்ம்ம்ம்” …. ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ...

என்னனு கேட்ககறீங்கள இதெல்லாம்.. இதை நீங்க கண்டிப்பா கேட்டு இருப்பீங்க . ஏதாவது சிக்னல் ல இருக்கும்போது சிகப்பில் இருந்து பச்சைக்கு விளக்கு மாறும் நேரத்தில் இந்த சத்தங்கள் நீங்க கேட்டு இருக்கலாம். ஒலிப்பான் னு சொன்னது நீங்கள் மற்றவர்களுக்கு உங்கள் வருகையை தெரியப்படுத்த வேண்டியே தவிர , சிக்னல் ல இருக்கும்போது அமுக்கி விளையாட அல்ல..

இன்று அலுவலகம் வரும் வழியில் இருந்த மூன்று சிக்னலிலும் இந்த காட்சியை காண முடிந்தது. அது என்ன பழக்கம் னு தெரியலை. முன்னாடி இருக்கும் அனைத்து வண்டிகளும் சென்ற பிறகுதான் நம்மால் முன்னேறி செல்ல முடியும் என்ற 'சிற்றறிவு' தெரியாத ஜந்துக்கள் விடாமல் இந்த ஹார்ன் - ஒலிப்பான் செய்து கொண்டு இருந்தனர். பெரிய வண்டிகளில் இந்னாடி ஒட்டி இருக்கும் போஸ்டர் 'சவுண்டு ஹார்ன்' என்பதை தப்பாக புரிந்து கொண்டனர் போலும்.

எல்லாருக்கும் தெரியும் நமக்கு இருக்கும் அவசரத்தை போல அனைவருக்கும் இருக்கும் என்று. ஆனால் முன்னால் இருக்கும் வாகன நெரிசல் நகராமல் இருக்கும்போது நீங்கள் இந்த ஹார்ன் அடித்து என்ன ஜெட் வேகத்தில் பறந்து செல்ல போறீங்கள ..? இல்லையே பின் எதற்க்கு இத்தனை இரைச்சல் எழுப்ப வேண்டும். முன்னால் செல்லும் மிதிவண்டி, நீங்கள் அடிக்கும் ஹார்ன் இரைச்சலுக்கு 'சோழவரம்' பந்தயத்தில் ஓட்டுவது போல் செல்ல முடியாது.

அனைவரும் தயவு செய்து - தேவை இல்லாமல் ஹார்ன் அடிக்க மாட்டோம் என்று உறுதி எடுத்துக்கொண்டலே நம்மால் இயன்ற அளவு சத்த இரைச்சல் இல்லாமல் இருக்கலாம். இருக்கும் பிரச்னை போதாது என்று இந்த 'டமாரம்' தேவை தான..?

முடிந்தால் அனைவரும் ஒரு நாள் ஒலிப்பான் உபயோகிக்காமல் இருக்க முடிவு செய்து பார்த்தால், இயற்கையோடு கலந்து இருக்கும் மிக சிறப்பான ஒலிகள் கேட்டு மகிழலாம். நான் இதை செய்வதற்கு தயார், நீங்கள் அனைவரும் எப்போது ..?

No comments:

Post a Comment